பெரியகுளம் பகுதியில் செவ்வந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில்  மஞ்சள் செவ்வந்தி மற்றும் கோழிக்கொண்டை பூக்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால், உற்பத்தி செய்யப்பட்ட பூக்கள் விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு நோய்த்தொற்று பரவல் முற்றிலும் குறைந்து வழக்கம்போல கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் பூ உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வமுடன் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் மஞ்சள் செவ்வந்தி பூக்களை அதிக அளவில் பயிரிட்ட விவசாயிகளுக்கு தற்போது கிலோ 30 முதல் 40 ரூபாய் முதல் விலை போவதால் பூ உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு