பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை முழுக்கொள்ளளவை எட்டியது

பெரியகுளம், ஜன. 14: பெரியகுளம் நகராட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும் 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களின் பாசனத்திற்கும் சோத்துப்பாறை அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சோத்துப்பாறை அணை அக்.16ம் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடி நீர் நிறைந்து கடந்த 90 நாட்களாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது அணைக்கு நீர்வரத்து 118.25 கன அடியாகவும், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 118.20 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

அதேபோல் மஞ்சளார் அணை தேனி-திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்கும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில், அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 56 அடியை கடந்த அக்.16 ம் தேதி எட்டியது. இதனை தொடர்ந்து தேனி – திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 90 நாட்களாக 56 அடியில் முழு கொள்ளளவு உடன் இருந்து வருகிறது. தற்பொழுது அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 56.50 அடி நீர் நிறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 122 கன அடி ஆக உள்ள நிலையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றும் 122 கன அடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றம் 80 கண அடி நீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 466.30மில்லியன் கன அடியாக உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை