பெரம்பலூர், தஞ்சையில் ஜல்லிக்கட்டு அமர்க்களம்

பெரம்பலூர்: பெரம்பலூர், தஞ்சையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,300 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி முகமதுபட்டினம் சாலையில் உள்ள திப்புசுல்தான் திடலில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களும், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினரும் பரிசோதனை செய்தனர். இறுதியாக 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8.45 மணியளவில் எம்எல்ஏ பிரபாகரன், ஆர்டிஓ நிறைமதி துவக்கி வைத்தனர். முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.  காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு, தங்கம், வெள்ளி காசு, மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள், ஹெல்மெட் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.  டிஎஸ்பி சஞ்சீவ் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அதேபோல், தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி ரெட்டிப்பாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட  800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். போட்டியை தஞ்சை ஆர்டிஓ ரஞ்சித் துவக்கி வைத்தார். சில காளைகள் ஓடாமல் நின்று விளையாடி வீரர்களுக்கு கிலி ஏற்படுத்தின. இங்கும் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

Related posts

தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: டெல்டா மாவட்டத்துக்கு செல்லும் மக்கள் தவிப்பு

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு