பெரம்பலூர் சிவன் கோயிலில் சேக்கிழார் குரு பூஜை விழா

 

பெரம்பலூர், ஜூன் 11: பெரம்பலூர் சிவன் கோயிலில் சேக்கிழார் குரு பூஜை விழா நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்ம புரீஸ் வரர் கோயிலில் தனி மண்டபத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராக எழுந் தருளி அருள் பாலித்து வரும் சேக்கிழார் குரு பூஜை விழா நேற்று காலை 11:30 மணிய ளவில்நடைபெற்றது.

இந்த குருபூஜையை முன்னிட்டு பால், தயிர், சந்தனம்,பழ வகைகள், வாசனை திரவி யங்கள் உடன் சிறப்பு அபி ஷேகம் முடித்து, பகல் 1 மணி அளவில் மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவில், ராஜமாணிக்கம், மணி, வைத்தீஸ்வரன், வார வழிபாட்டு குழுவினர், சிவனடியார்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோயிந்தராஜ னும், பூஜைகளை கவுரி சங்க சிவாச்சாரியாரும் செய்திருந்தனர். இதில் பெரம்பலூர், துறைமங்க லம், அரணாரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிவ பக்தர்கள் திர ளாக கலந்துகொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை