பெரம்பலூர் குறுவட்ட அளவில் டென்னிகாய்ட், கேரம் விளையாட்டுப் போட்டிகள்

 

பெரம்பலூர், ஆக.24: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக 2024-2025 ஆம் ஆண்டுக்கான பெரம்பலூர் குறுவட்ட அளவிலான டென்னிகாய்ட் மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் நேற்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் துரை.ரவிசித்தார்த்தன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட டென்னிக்காய்ட் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் முதலிடம் பெற்றனர். 14, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றையர், இரட்டையர் பிரிவில் சிறுவாச்சூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் தந்தை ரோவர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றையர், இரட்டையர் பிரிவில் இந்திராநகர் தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளி இராண்டாமிடம் பெற்றது.

 

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்