பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 414 மனுக்கள் பெறப்பட்டது

பெரம்பலூர், அக்.1: பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 414 மனுக்கள் பெறப்பட்டது. அப்போது பேசிய கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மக்களின் கோரிக்கைகளுக்கு முன் னுரிமை கொடுத்து, அவற்றை நிறைவேற்ற அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களின் கோரிக்கை மனுக்களை மாவட்டக் கலெக்டர் பெற்றுக் கொண் டார்.

அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் தனிப் பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடை பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் போன்ற நிகழ்வுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்த பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்டக் கலெக்டர், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன் னுரிமை கொடுத்து அவற்றை நிறைவேற்றுவ தற்கு அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வு டன் பணியாற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திற னாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து 414 மனுக்கள் பெறப்பட்டன. இந்தக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர ராமன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி