பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் சித்த மருத்துவ பிரிவுக்கு புதிய கட்டிடம்

 

பெரம்பலூர்,பிப்.10: பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகள், வெளிநோயாளிகள் பிரிவு, தீவிர அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, மகப்பேறு உள்பட பல்வேறு பிரவுகள் தனித்தனியாக இயங்கி வருகிறது.
சித்த மருத்துவ பிரிவிற்கு தனி கட்டிடம் வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நேற்று துவங்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து, சித்த மருத்துவ அலுவலர் ஜாக்குலின்சித்ரா, சித்த மருத்துவர் விஜயன், நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி