பெண்ணின் வீட்டு சுவரை இடித்த பாஜ நிர்வாகிக்கு போலீஸ் வலை

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் வசந்தகுமாரி. ஜெயங்கொண்டம் மேலகுடியிருப்பை சேர்ந்தவர் ராமர். ஜெயங்கொண்டம் நகர பாஜ தலைவர். இந்நிலையில், வசந்தகுமாரி புறம்போக்கு இடத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவரை கட்டியுள்ளதாக கூறி, நேற்று முன்தினம் அத்துமீறி சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன்  சுற்றுச்சுவரை, ராமர் இடித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் வசந்தகுமாரி புகார் செய்தார். அதில், பட்டா உள்ள இடத்தில் தான் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டியுள்ளேன். ஆனால் அத்துமீறி நுழைந்து பாஜ நகர தலைவர் ராமர், சுற்றுச்சுவரை இடித்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து பாஜ நகர தலைவர் ராமர், பொக்லைன் டிரைவர் ராம்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து ராம்குமாரை நேற்று கைது செய்ததுடன், பொக்லைனை பறிமுதல் செய்தனர். ராமரை தேடி வருகின்றனர்….

Related posts

போன மாதம் கிரிக்கெட் ஸ்டேடியம்; இந்த மாதம் ஹாக்கி ஸ்டேடியம்; விரைவில் பணிகள் துவக்கம்

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்