பெண்களுக்கான வாழ்வியல் வழிகாட்டி பயிலரங்கு

கோத்தகிரி, ஜூன் 22: கோத்தகிரியில் உள்ள கேர் அறக்கட்டளை சார்பில் வளர் இளம் பெண்கள் மற்றும் அனைத்து பெண்களுக்கான செயல்பாட்டு குழுக்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு அறக்கட்டளை அறங்காவலர் வினோபா தலைமையில் நடைபெற்றது.பெண்களுக்கான உயர்கல்வி, அரசாங்க தேர்வுகள் எழுதும் முறைகள், கடன் உதவிகள் பெற வழிமுறைகள், பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், இலவச சட்ட உதவிகள் மைய சேவைகளை பெறுவதற்கான வழிவகைகள், பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்ட பணிகள் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பயிற்சியாளர்களாக மாவட்ட தொழில்நெறிமுறை அலுவலர் கஸ்தூரி, தொழில் மைய இயக்குனர் திலகவதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கெஜலட்சுமி, வழக்கறிஞர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டு மேற்கண்ட அலகுகளில் பயிற்சி அளித்தனர். இதில், 50 பெண்கள் உட்பட அறக்கட்டளை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி