பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு மற்றும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கே.திராவிடபக்தன், ஆர்டிஇ.ஆதிசேஷன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன் ஆகியோர் மணவாளநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பட்டாபிராமிலும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் டி.ரமேஷ், திருவேற்காடு நகர திமுக செயலாளர் என்.இ.கே.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் ஆகியோர் திருவேற்காட்டிலும், பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜெயக்குமார், நகர செயலாளர் எம்.ரவிக்குமார் ஆகியோர் கரையான்சாவடியிலும், மேற்கு ஒன்றிய செயலாளர் டி.தேசிங்கு கொத்தியம்பக்கத்திலும், பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் டி.கிருஷ்டி, ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி ஆகியோர் தங்களது இல்லங்கள் முன்பும், திருமழிசை பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், மாவட்ட பொறுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார் த.எத்திராஜ், ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லா, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஈக்காடு கே.முகமது ரஃபி ஆகியோர் தங்களது இல்லங்களின் முன்பும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூவை பீ.ஜேம்ஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.இமயவர்மன், ஐ.தாயுமானவன், எம் கோபால், அணில் பைசல், டெல்லி சுரேஷ், ஏசுபாதம், பசுவராஜ், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜசேகர், குமரேசன், வீரபாண்டியன், கோபி, சிட்டிபாபு, யூனூஸ், சோமு, குமார், தசரதன், டேனியல், ஏசு ஆகியோர் முன்னிலையில் குமணன்சாவடியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் எதிரிலும், வயலூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் சீனிவாசன், வழக்கறிஞர் எஸ்.பார்த்தீபன், சீத்தாபதி, சாந்தி, தயாளன், முருகன், ரவி, ஆறுமுகம், வெங்கடேசன், ரமேஷ், பெருமாள், நாராயணன் ஆகியோரும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு மற்றும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்து ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ்,   முகமது மொய்தீன், சங்கர், ஏழுமலை, சம்பத், முனுசாமி, தமிழரசு உட்பட பலர் கலந்துகொண்டனர். திருத்தணி: ஒன்றிய அரசின் வேளாண் சட்டம் மற்றும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், திருத்தணியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தார். எஸ்.சந்திரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் மு.நாகன், வக்கீல் கிஷோர்ரெட்டி, நகர துணை செயலாளர் கணேசன், நகரபொறுப்பாளர்கள், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வக்கீல் சீனிவாசன், ஜிஎஸ்.கணேசன், முன்னாள் கவுன்சிலர் ஜின்னா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகூர் கிராமத்தில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அகூர் மாணிக்கம் தலைமையில் திமுகவினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கொள்ளூர் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் வெற்றி, மாதர்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன், தயாளன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். இதேபோல், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லூர் திமுக கிளை அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் வல்லூர் ரமேஷ் ராஜ், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் தன்சிங், தமிழரசன், முனுசாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே ஒன்றியக்குழு தலைவர் ரவி தலைமையில் திமுக நிர்வாகிகள் முன்னிலையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

Related posts

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி