பூளவாடி நூலகத்தில் ‘கதை சொல்லி’ பூங்கொடிக்கு மக்கள் பாராட்டு

 

உடுமலை, அக்.17: பூளவாடி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பூங்கொடி என்பவரின் சேவைக்கு பொதுமக்கள், எழுத்தாளர்கள் தரப்பில் பாராட்டு குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பூளவாடி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சி நடந்தது. அன்புமயமாக வாழ்தல், இயற்கையை போற்றுதல், விவசாயியின் உழைப்பு, மரம் வளர்ப்பு, பறவைகளை பாதுகாத்தல், இளம் வயதில் புத்தக வாசிப்பால் ஏற்படும் நன்மைகள், கடிதங்கள் எழுதுவதால் ஏற்படும் மொழி வளம் ஆகியவை குறித்த கதைகள், கலந்துரையாடல் நடைபெற்றன.

பாடல்கள் மூலம் நூலகத்தில் கதை களம் அமைத்து கதை சொல்லிய பூங்கொடி பாலமுருகன், குழந்தைகளுக்கு உணர்வு பூர்வமாக விளக்கினார். இதையடுத்து குழந்தைகள் மனதில் அறிவையும், நேசத்தையும், மனிதத்தையும் விதைக்கும் ‘கதை சொல்லி’ பூங்கொடி சேவைக்கு அப்பகுதி பொதுமக்கள், எழுத்தாளர்கள் தரப்பில் பாராட்டுகள் நாளுக்குநாள் குவிந்து வருகிறது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை