பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் துணை மின்நிலையம் திறப்பு

பூந்தமல்லி, செப். 1: சென்னை மெட்ரோ ரயில் பூந்தமல்லி பணிமனையில் துணை மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி பணிமனையில் 110/33-27 கி.வோல்ட் துணை மின்நிலையம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையமானது, மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் முக்கியமான உள்கட்டமைப்பாகும்.

இதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. சென்னைக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்குவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. மேலும் நகரத்தில் தடையற்ற மெட்ரோ ரயில் பயண அனுபவத்திற்கு வழி வகுக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்