பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி பகுதியில் 1,025 கோடியில் 30 கி.மீ.க்கு சென்னை வெளிவட்ட சாலை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்கு உட்பட்ட சென்னை வெளிவட்ட சாலையின் 2ம் கட்டமாக 1,025 கோடி செலவில் நெமிலிச்சேரி முதல் பாடியநல்லூர் வழியாக திருவொற்றியூர் – பொன்னேரி – பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையில் 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 6 வழித்தட பிரதான சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.மேலும், நெடுஞ்சாலை துறையில் 2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டுகளுக்கான 94 தட்டச்சர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை