பூதப்பாண்டி அருகே வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பூதப்பாண்டி, செப்.30 : ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள வெள்ளமடம் கிறிஸ்துநகர் பகுதியில் பறக்கும் படை தனி தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் துணை தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த சொகுசு டெம்போ டிராவலர் வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியையும், அதை கடத்த பயன்படுத்திய சொகுசு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்