பூச்சி மருந்து கொடுத்து காதலன் கொலை; கல்லூரி மாணவியின் தாய், மாமாவும் கைது

திருவனந்தபுரம்: குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மாவின் தாய், தாய் மாமாவை கேரள போலீசார் நேற்று கைது செய்தனர். குமரி மாவட்டம், நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜை கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில், கல்லூரி மாணவியான அவரது காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். நெடுமங்காடு போலீஸ் நிலையத்தில் அவர், கழிப்பறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதால், திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே, கிரீஷ்மாவின் தந்தை, தாய் சிந்து (52), தாய் மாமா நிர்மல் குமார் (62) மற்றும் அவரது மகள் ஆகியோரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில், கஷாயத்தில் விஷம் கலக்க கிரீஷ்மாவுக்கு சிந்து உதவியது உறுதியானது. இந்த கொலை முயற்சி பற்றி முதலில் நிர்மல் குமாருக்கு தெரியாது.  ஷாரோனுக்கு கஷாயம் கொடுத்த 2 நாட்களுக்குப் பின்னர்தான், அந்த விவரத்தை நிர்மல் குமாரிடம் சிந்து கூறியுள்ளார். உடனே அவர், விஷம் கலந்த கஷாய பாட்டிலை அழித்துள்ளார். இதையடுத்து, இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், கிரீஷ்மாவின் வீட்டிற்கும் சீல் வைத்தனர்….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு