புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அரிசி

கோவை, ஜூன் 19: கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. சுமார் 11 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. மாவட்ட அளவில், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரள மாநிலத்தை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பிற மாவட்ட தொழிலாளர்களும் அதிகமாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் ரேஷன் அட்டை வைத்துள்ளனர். சொந்த ஊர் முகவரியில், அந்த பகுதி கடையில் ரேஷன் கார்டு இருக்கிறது. இவர்கள் கோவையில் வேலை செய்யும் பகுதி, தங்குமிடம் அருகேயுள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவர்களில் சிலருக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் பிற மாநிலத்தினருக்கு ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல ஆயிரம் வெளி மாநில ெதாழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக அரிசி வாங்கி வருவதாக தெரியவந்துள்ளது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்