புனித தோமையர் மலை ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிக்கூடம்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதி, புனித தோமையர் மலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக்கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சோழிங்கநல்லூர் தொகுதி, புனித தோமையர் மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு முன் வருமா என சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், வரும் நிதியாண்டில் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பெரும்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கத்தில் ஏற்கனவே உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, 15 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படுவதாக கூறினார். மேலும், சித்தலபாக்கம் ஒண்டியம்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கூறிய அவர், நன்மங்கலத்தில் தேவையான இடம் கண்டறியப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்