புத்தாண்டு நாளில் ரூ. 2000 .. 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திய பிரதமர் மோடி!!

டெல்லி : அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிகளை அதிகாரப்படுத்த வேண்டுமென்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் (பிஎம் – கிசான்) 10-வது தவணை நிதியுதவியை காணொலிக் காட்சி மூலம் விடுவித்தார். ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட இந்தத் தொகை மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்கள் பயனடையும்.பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பயனாக வழங்கப்பட்டு வருகிறது. இது 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த நிதிப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேல் கவுரவத் தொகை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 10வது தவணை நிதியை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடிய பிரதமர், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். சுமார் 10 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான நிதியுதவியை 10வது தவணையாக பிரதமர் மோடி இன்று விடுவித்தார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!