புதூர் ஒன்றியத்தில் சாலைப் பணிகளை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

விளாத்திகுளம்,பிப்.14: முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதூர் ஒன்றிய பகுதிகளில் நடந்துவரும் சாலைப் பணிகளை மாநில தரக்கட்டுப்பாட்டு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ₹ 150 கோடி செலவில் பாலம் கட்டுதல் மற்றும் சாலை அமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. இப்பணிகளை சென்னையைச் சேர்ந்த மாநில தரக்கட்டுப்பாடு அதிகாரி நாகப்பன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் புதூர் ஒன்றியத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சக்கிலிபட்டி மயானச்சாலை மற்றும் மேலக்கல்லூரணி சாலை ஆகியவற்றை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். அப்போது கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர் (சாலைகள் மற்றும் பாலங்கள்) முத்துமாரி, புதூர் ஒன்றிய பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், பீர் முகமது, ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்