புது அம்மாபாளையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்

பெரம்பலூர், ஏப்.21: குடிநீரை சுத்தம் செய்து தரக்கோரி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புது அம்மாபாளையம் கிராமப் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் புதுஅம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று(20ஆம்தேதி) பகல் 12மணி அளவில் பெரம்ப லூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கை யில், தங்கள் ஊரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அருகே உள்ள ஊரிலிருந்து சிலர் முயல் வேட்டைக்காக வந்தவர்கள், சாரை பாம்பு ஒன்றை அடித்துகொன்று அதை அங்குள்ள குடிநீர் கிணற்றில் தூக்கி வீசிவிட்டு சென்றனர். இதனால் தண்ணீர் கெட்டுப் போய் குடிக்க முடியாமல் இருந்துள்ளது. இதனை சுத்தம் செய்துதரக் கோரி ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நேற்று பெரம்ப லூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி கிராம மக்கள் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் சரக டிஎஸ்பி பழனிச்சாமி, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து மாவட்ட கலெக்டரிடம் அத னைத் தெரிவித்துள்ளார். இதனையறிந்த மாவட்டக் கலெக்டர் கற்பகம் உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர், ஊ ராட்சிகள் உதவிஇயக்குநர் அருளாளன், வட்டார வள ர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நேரில் கிணற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொ டர்ந்து புதுஅம்மாப்பாளை யம் கிராமப் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு விட்டுக் கலைந் துசென்றனர். இந்தப் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு அரைமணி நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா