புதுவயல் பேரூராட்சி கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காரைக்குடி, ஜூன் 14: காரைக்குடி அருகே புதுவயல் பேரூராட்சி கூட்டத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்கு அயராது உழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. காரைக்குடி அருகே புதுவயல் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் முகம்மது மீரா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பகுருதீன் அலிபாய், செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அபுபக்கர் சித்திக், ஆராயி, அமுத சுந்தரி, எமிஜெபராணி, வாசுகி, சரண்யா, நல்லமுத்து, செல்வா, பூரணிமாதேவி, சாகுல் ஹமீது, உஷா, கரு.நாச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பிறப்பு, இறப்பு பதிவுகள். 2024 2025ம் ஆண்டிற்கான கோடை கால வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது. வரவு, செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு உள்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரூராட்சி தலைவர் முகமதுமீரா பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தேவைக்கு ஏற்ப முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.  துணைத்தலைவர் பகுருதீன் அலி பாய் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றியடைய அயராது உழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்