புதுச்சேரி பெரிய மார்க்கெட் பூக்கடையில் தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை

*  2 வாலிபர்கள் அதிரடி கைது *  விசாரணையில் திடுக் தகவல்கள் புதுச்சேரி :  புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறு பெரியார் நகர் முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அருளானந்து (38). இவர் புதுச்சேரி நேரு வீதி பெரிய மார்க்கெட்டில் காண்டீபன் என்பவரது பூக்கடையில் தங்கி வேலை செய்தார். அருளானந்துக்கு திருமணமாகாத நிலையில் அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனால் அவ்வப்போது அவர், காரைக்கால் சென்று, வேலைக்காக திரும்பி வந்துள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் உள்ள பூக்கடையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பூக்கடை பூட்டப்பட்ட நிலையில் அங்கேயே அருளானந்து இருந்துள்ளார். இதற்கிடையே மார்க்கெட் பகுதியில் அருளானந்து நள்ளிரவில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்று அதிகாலை பெரிய மார்க்கெட் பூக்கடை சாலை பகுதிக்கு வந்த வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐ சிவசங்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பூக்கடையில் கொலை செய்யப்பட்டு கிடந்த அருளானந்தின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சோதனையிட்டனர். அப்போது அருளானந்து கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு அருகில் நார் அறுக்க பயன்படுத்தும் கத்தியும், மதுபாட்டிலும் கிடந்தது.எனவே நள்ளிரவு அருளானந்து தங்கியுள்ள கடைக்கு அருகில் யாராவது மது குடித்திருக்கலாம் என்றும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து சீனியர் எஸ்பி தீபிகா உத்தரவின்பேரில், கிழக்கு எஸ்பி (பொறுப்பு) ஸ்வேதா வழிகாட்டலின்பேரில் கொலை வழக்கு பதிந்து, விசாரணை முடுக்கி விடப்பட்டது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், பக்கத்து பூக்கடைகளில் வேலை செய்யும் வைத்திகுப்பம் செல்வராஜ் செட்டியார் வீதி குதிரைகுளத்தை சேர்ந்த பாலாஜி (23), பிள்ளைத்தோட்டம் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிவபாலன் (19) ஆகியோர் சேர்ந்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அருளானந்துவை கொன்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரித்ததில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அருளானந்து, பாலாஜி, சிவபாலன் ஆகிய 3 பேரும் பெரிய மார்க்கெட்டில் வெவ்வேறு உரிமையாளர்களின் பூக்கடைகளில் வேலை செய்பவர்கள். கொலை செய்யப்பட்ட அருளானந்துக்கும், பாலாஜி, சிவபாலனுக்கும் இடையே யார் அதிக பூ வேலைகள் செய்வது என்ற தொழில் போட்டியால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.15 மணியளவில் சிவபாலனும், பாலாஜியும் அருளானந்துவின் பூக்கடை எதிரில் மது அருந்தியுள்ளனர். அப்போது அருளானந்தும், சிவபாலனை பூ வேலை செய்ய தெரியாத ஆள் என்றும், பாலாஜியை உண்டியல் திருடன் என்றும் சொல்லி கேலி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பூ வேலைகளுக்கு பயன்படுத்தும் 3 கத்திகளை எடுத்து, அருளானந்து படுத்திருந்த காண்டீபன் கடைக்குள் சென்றனர். அங்கு அருளானந்துவை கழுத்து, மார்பு, தலை ஆகிய பகுதிகளில் கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்துள்ளனர். மேலும் கொலை செய்துவிட்டு கொலையாளிகள் அவர்களது கடைகளிலே படுத்து தூங்கி உள்ள்னர். மேற்கண்ட தகவல்களை கொலையாளிகள் இருவரும் வாக்குமூலமாக அளித்துள்ளனர். இதையடுத்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்திகள், ரத்தக்கறை படிந்த துணிமணிகள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். இவ்வழக்கில் குற்றவாளிகளை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.இரவு 10 மணிக்கு கடைகளை மூட வேண்டும்  கொலையாளிகள் கைது குறித்து எஸ்பி ஸ்வேதா கூறும்போது, நகாாட்சி சட்டப்படி பெரிய மார்க்கெட் கடைகளை இரவு 10 மணிக்கு மூடி, அதிகாலை 4 மணிக்கு திறக்க வேண்டும். ஆனால், சிலர் கடைகளை மூடி விட்டு செல்லாமல், அங்கேயே தங்கி விடுகின்றனர். எனவே, மார்க்கெட் கடைகளை இரவு 10 மணிக்கு மூட நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி நகராட்சிக்கு காவல்துறை சார்பில் பரிந்துரை செய்துள்ளோம். எனவே, இனிமேல் மார்க்கெட்டில் கடைகளை இரவு 10 மணிக்கு மேல் திறந்து, யாராவது அங்கு தங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். …

Related posts

வீட்டுவாசலில் போதையில் தூங்கியதால் அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூரக் கொலை: பெரும்பாக்கத்தில் பயங்கரம்

ஏரியில் பெண் சாமியார் வெட்டிக்கொலை: சென்னையை சேர்ந்தவர்?

பெண் தாசில்தாருக்கு மிரட்டல்; நெல்லை பெண் போலி ஐஏஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு: பாஜ பிரமுகரும் கைது