புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்தரங்கம்

புதுக்கோட்டை,ஜூலை 3: தேசிய மருத்துவத்தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் இந்திய மருத்துவ கழகம் புதுக்கோட்டை கிளை இணைந்து நடத்தும் தேசிய நடத்திய மருத்துவர்கள் தின வாழ்த்தரங்கம் திலகர் திடல் பகுதியில் உள்ள இந்திய மருத்துவ கழகம் ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி மற்றும் துணை ஆளுநர் லெட்சுமனன் அவர்கள் முன்னிலையில், இந்திய மருத்துவ கழக தலைவர் சுல்தான் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு மருத்துவர்களின் பணியை பற்றியும் செயல்கள் குறித்தும் மருத்துவர்களின் பனி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தந்து என்பதை எடுத்துரைத்து வாழ்த்துரை கூறி சிறப்புரை ஆற்றினார் .

விழாவில், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், மருத்துவர்கள் ராமமூர்த்தி, சுரேஷ் குமார், நவரத்தினசாமி உட்பட பல மருத்துவர்கள் மற்றும் புதுக்கோட்டை நகரில் உள்ள பல்வேறு ரோட்டரி சங்க நிர்வாகிகள், தலைவர்கள் மற்றும் செயலாளரளர்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் சரவணன் ஏற்புரை ஆற்றினார். மருத்துவர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தனியார் மருத்துவமனை கூட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ரோட்டரி மாவட்டம் 3000 இதின் ரோட்டரி மருத்துவர்கள் மன்ற செயளாளர் சலீம் தொகுத்து வழங்கினார். இறுதில் இந்திய மருத்துவ கழக செயலாளர் ராஜா நன்றியுரை கூறினார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு