புதுக்கோட்டையில் தண்ணீரில்லா கால்வாயில் சிக்கி தவித்த கன்று மீட்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தண்ணீர் இல்லாத கால்வாயில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த கன்றை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி இழுத்து காப்பாற்றினர்.புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள தண்ணீர் இல்லா கால்வாயில் கன்று ஒன்று சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து உள்ளது. இதனையடுத்த அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீர் இல்லாத கால்வாயில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த கன்றை கயிறு கட்டி பத்திரமாக வெளியே இழுத்து மீட்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்….

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!