புகையிலை பொருட்கள் விற்பனை; 32 கடைகளுக்கு சீல்

 

திருப்பூர், ஆக.14: திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த ஒரு வாரம் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது 32 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 32 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த கடைகளுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்கள தங்களது பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்