புகையிலை பொருட்கள் விற்ற 2 பேக்கரிக்கு சீல்

திருச்செங்கோடு, ஜூன் 27: திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகில் செயல்படும் பெட்டிக்கடைகள், ஓட்டல், பேக்கரி ஆகியவற்றில், நகராட்சி கமிஷனர் சேகர் தலைமையில் சுகாதார அலுவலர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் குழு கடைகளில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுகள், புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேக்கரிகள் கண்டறியப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளர்களுக்கு தலா ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நகரில் உள்ள 30 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு விதி மீறியவர்களுக்கு ₹28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை