புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

 

மானாமதுரை, ஜூலை 13: சிவகங்கை மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் சந்தான வித்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சதீஸ்குமார், குருபிரகாஸ்,

கிராம சுகாதார செவிலியர் வித்யா ஆகியோர் புகையிலை சம்பந்தப்பட்ட விபரங்களை கூறி அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதனை தடுக்கும் முறைகள் பற்றிய கருத்துக்களை மாணவர்களுடன் கலந்துரையாடல் மூலமாக எளிய முறையில் விளக்கம் கொடுத்தனர். பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் இணைந்து புகையிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு வகையான கோஷங்கள் முழங்கி சென்றனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’