பீகாரை அடுத்து மணிப்பூரிலும் பாஜக- ஜேடியு கூட்டணி முறிவு.. நிதீஷ் குமார் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு

இம்பால்: மணிப்பூரில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி விலக்கிக் கொண்ட நிலையில், திடீர் திருப்பமாக ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் ஐக்கியமாயினர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த மார்ச்சில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜக வென்றது. பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜகவின் வைரன்சிங் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் பீகாரில் பாஜக ஐக்கிய ஜனதாதள கூட்டணி முறிந்து ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி உடன் ஐக்கிய ஜனதாதளம் இணைந்து ஆட்சி அமைத்தது. இதையடுத்து மணிப்பூரில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகுவதாக கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் அறிவித்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக நிதீஷ்குமார் கட்சியை சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென கட்சியில் இருந்து விலகினர். போட்டி கட்சி துவங்கி பாஜகவில் இணைந்தனர். இவர்கள் பாஜகவில் இணைத்ததற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்தார். ஏற்கெனவே இதேபோல் கடந்த 2020ம் ஆண்டில் அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்த 7 சட்டமன்ற உறுப்பினர்களில் 6 பேர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.    …

Related posts

ஆளுநரின் அனுமதிக்கு எதிரான வழக்கு; கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி: அரசியல் ரீதியிலான சிக்கலால் காங்கிரஸ் ஆலோசனை

கட்சியை அழித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தான் பாஜவுடன் கூட்டணி வைத்தோம்: அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்