பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 20: கெலமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி தலைமையில், இளநிலை உதவியாளர் சீனிவாசன், துப்புரவு மேற்வார்வையாளர் நாகேந்திரன், அலுவலக பணியாளர்கள் ஆகியோர், கெலமங்கலம் பஸ் நிலையம், கடைவீதி, மளிகை கடைகள், பேக்கரிகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், தள்ளுவண்டி டிபன் கடைகளில், பாஸ்ட் புட் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் கவர்களை பறிமுதல் செய்தனர். மேலும், அதனை பயன்படுத்திய கடைகளின் உரிமையாளர்களிடம் ₹2 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்