பிளஸ்2 மாணவி தற்கொலை விவகாரம் மாணவிக்கு சூடு வைத்து சித்தி கொடுமை: தாத்தா, பாட்டி பரபரப்பு பேட்டி

தஞ்சை: பிளஸ்2 மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் மாணவிக்கு சூடு வைத்து சித்தி கொடுமை செய்ததாக தாத்தா, பாட்டி தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்2 மாணவி தற்கொலை தொடர்பாக விசாரிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் நேற்று தஞ்சை வந்தனர். விசாரணையில், மாவட்ட எஸ்.பி ரவளிப்ரியா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளிக்கு சென்றனர். அங்கு பள்ளி அங்கீகார ஆவணங்கள், காப்பகத்தின் ஆவணங்களை சரிபார்த்தனர். இதுபற்றி முன்னாள் மாணவி கூறுகையில், இந்த பள்ளியில் தான் எனது பெற்றோர், சகோதரி படித்தனர். மதம் மாறி சொல்லி பள்ளியில் யாரையும், வற்புறுத்தியது கிடையாது. 5 ஆயிரம் பேர் படிக்கும் பள்ளியில் இந்த மாணவியை மட்டும் மதம் மாற வேண்டும் என கூற வேண்டிய அவசியமில்லை என்றார். மாணவியின் தாய் வழி தாத்தா சுப்பிரமணி, பாட்டி மங்கையர்கரசி ஆகியோர் கூறுகையில், எனது மகள் இறந்த பின்னர் பேரக் குழந்தைகள் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டனர். எனது மருமகன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் எவ்வித தொடர்பும் இல்லை. இடையில் எனது பேத்தி படித்த பள்ளி ஆசிரியர் உங்கள் பேத்தியின் கையில் வெண்புள்ளிகள் போல் உள்ளது என்று தெரிவித்தார். எனது மருமகனின் 2வது மனைவி எனது பேத்தியை ஒருமுறை சூடு வைத்துள்ளார். மேலும் ஒருமுறை கையில் சூடம் ஏற்றி கொடுமைப்படுத்தியதாக எங்களுக்கு செய்திகள் வந்தன என்றனர். பின்னர் அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தில் மாணவியின் தந்தை, சித்தி மற்றும் சகோதரர்களிடம் விசாரணை நடந்தது. பின்னர் மதுலிகா சர்மா அளித்த பேட்டியில், ஆணையம் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கை அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றார்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்