பிரம்ம குமாரிகள் வித்யாலயா தலைமை நிர்வாகி காலமானார்: ராஜஸ்தானில் இன்று இறுதி சடங்கு

மும்பை: பிரம்ம குமாரிகள் அமைப்பின் அகில உலக தலைமை நிர்வாகி ஹிருதய மோகினி உடல் நலக்குறைவினால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 93. உலகில் பெண்களால் நடத்தப்படும் மிகப் பெரிய ஆன்மிக அமைப்பு பிரம்ம குமாரிகள் விஷ்வ வித்யாலயா. இதன் தலைமை நிர்வாகி ஹிருதய மோகினி, உடல்நலக் குறைவினால் மும்பை சபி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதி சடங்கு, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமையகமான ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் இன்று நடைபெறுகிறது. `தாதி குல்ஜார்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மோகினி, தனது 8 வயதில் பிரம்ம குமாரிகள் அமைப்பில் சேர்ந்தார். மனதை ஒருமுகப்படுத்துதல், ஆழ்நிலை தியானம், எளிமை போன்றவற்றில் மிகவும் தேர்ந்தவராக விளங்கினார். உலகம் முழுவதும் 140 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்ட ராஜயோக தியான மையங்களை நிறுவ பெரும் பங்காற்றினார். இவரது ஆன்மிக சேவையை பாராட்டி, வடக்கு ஒடிசா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் ஆப் லிட்டரேச்சர் பட்டம் வழங்கி கவுரவித்தது….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை