‘பிரசாரமே செய்யாம எப்படி ஜெயிப்போம்’: பாஜ வேட்பாளர்கள் பரிதவிப்பு

ஈரோடு: ஈரோடு  மாநகராட்சி பகுதியில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து 2ம் கட்ட தலைவர்கள்கூட தேர்தல் பிரசாரம் செய்யாததால் வேட்பாளர்கள் அப்செட் ஆகி உள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 20 வார்டுகளுக்கு மட்டுமே பாஜ சார்பில் முதலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள வார்டுகளில் வேட்பாளர்கள் கிடைக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்ததால் வேறு வழியின்றி 2ம் கட்டமாக 30 வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியது. தேர்தலில் போட்டியிட்டால் போதும், வெற்றிக்கான வியூகங்கள் எல்லாம் கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கட்சி தலைமையில் இருந்து பிரசாரத்திற்குகூட தலைவர்கள் வராமல் உள்ளதால் வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக சார்பில் மாநகர பகுதியில் 60 இடங்களில் காணொலி மூலம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அடுத்தகட்டமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநகர  பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதுதவிர அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக தரப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  பிரசாரத்தை முடித்துவிட்டனர். பாஜ தரப்பில் தலைவர் அண்ணாமலை கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடத்தியதோடு சரி பிரசாரத்திற்கு  வரவில்லை. 2 கட்ட தலைவர்களாவது வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்  யாரும் எட்டிப்பார்க்காததால் வேட்பாளர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…