பிணைய பத்திரம் பெற்று 5 ரவுடிகள் விடுவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் குற்ற செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்திருந்தார். இந்நிலையில், உத்திரமேரூர் காவல் நிலையத்தில் கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளான கணேசன் மகன் கன்னியப்பன் (34), சந்திரன் மகன் கார்த்திகேயன் (35), கோபி மகன் தேவேந்திரன் (30), வெங்கடேசன் மகன் சரவணன் (எ) கண்ணாயிரம் (28) மற்றும் பெருமாள் மகன் தௌலத் (எ) தசரதன் (35) ஆகியோரிடம் இருந்து ஓராண்டிற்கான நன்னடைத்தை பிணையப் பத்திரத்தை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெற்றுக்கொண்டு திருந்தி வாழ அறிவுறுத்தி ஆணை பிறப்பித்துள்ளார்….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்