பாலாற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் வேலூரில் பரபரப்பு

வேலூர், ஆக.26: வேலூர் பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். இதையடுத்து அப்பகுதி மக்கள் மணல் லாரியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவரது மகன் யுவராஜ்(21). தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று யுவராஜ் சேண்பாக்கம் அடுத்த தண்டலம் கிருஷ்ணாபுரம் பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். பின்னர், ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது திடீரென யுவராஜ் நீரில் மூழ்கி மாயமானார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் தேடினர். பின்னர், சிறிது நேரத்தில் யுவராஜ் சடலத்தை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து, பாலாற்றில் சட்ட விரோதமாக மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி யுவராஜ் இறந்ததாக கூறி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மணல் லாரியை சிறை பிடித்தனர். மேலும், யுவராஜின் சடலத்தை கொண்டு செல்ல வந்த ஆம்புலன்சையும் சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து செல்ல செய்தனர். பின்னர், யுவராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
(செய்திஎண்04) கர்நாடகா துணை முதல்வர் அரசியலுக்காக பேசுகிறார்

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி