பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

 

வருசநாடு, ஜூன் 10: தேனி மாவட்டம், வருசநாடு அருகே முருக்கோடை- ராயர்கோட்டை இடையே மூலவைகை ஆற்றின் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் இந்த பாலம் சேதமடைந்து வருகிறது. குறிப்பாக பாலத்தின் தூண்களில் சிறிய அளவில் விரிசல்கள் ஏற்பட தொடங்கின. இது குறித்து அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் கடந்தாண்டு வைகையாற்றில் 10 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது பாலத்தின் தூண்களில் உள்ள விரிசல்கள் விரிவடைந்துள்ளன. வெள்ள பாதிப்பால் தூண்களின் கீழ்ப்பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால், இடியும் நிலையில் பாலம் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை