பாலக்கோடு அருகே கரும்பு காட்டில் பயங்கர தீ: 5 ஏக்கர் எரிந்து நாசம்

பாலக்கோடு, ஏப். 9: பாலக்கோடு அருகே மின்கசிவால் கரும்பு காட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 5 ஏக்கரில் பயிரிட்டிருந்த கரும்பு எரிந்து நாசமானது. பாலக்கோடு அடுத்த குத்தலஅள்ளியை சேர்ந்த விவசாயி நீலமேகம் என்பவர், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்த கரும்புகள் செழித்து விளைந்து அறுவடைக்கு தயராக இருந்தது.இந்நிலையில் நேற்று, கரும்பு தோட்டத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி பலத்த காற்றுக்கு உராய்ந்து தீப்பொறி கிளம்பியது. அது கரும்பின் மீது விழுந்ததால், கரும்பு தோட்டம் திடீரென தீ பிடித்துக்கொண்டது. இதுகுறித்து  பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். தீ வேகமாக பரவி, தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீ மளமளவென பரவி அருகில் இருந்த மகேந்திரன், சகாதேவன் ஆகியோரது கரும்பு தோட்டத்திற்கும் பரவி கொளுந்துவிட்டு எரியத்தொடங்கிது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் நீலமேகம், மகேந்திரன், சகாதேவன் ஆகியோரது 5 ஏக்கர் கரும்பு தோட்டம் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்