பாலக்காடு மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

 

பாலக்காடு, அக். 8: மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி மீட்டர் அளவில் பதிவாகியுள்ள விபரம் வருமாறு: காஞ்ஞிரப்புழா அணை 96.17 மீட்டர், மலம்புழா 108.08 மீட்டர், மங்கலம் 77.58 மீட்டர், போத்துண்டி 97.01 மீட்டர், மீன்கரை 150.36 மீட்டர், சுள்ளியாறு 141.81 மீட்டர், வாளையார் 195.43 மீட்டர், சிறுவாணி 871.88 மீட்டர், மூலத்தரை 181.70 மீட்டர் கணக்கில் நிரம்பியுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக மன்னார்க்காடு மற்றும் அட்டப்பாடி ஆகிய சுற்றுவட்டார மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வந்தன. இதனால் சிறுவாணி, காஞ்ஞிரப்புழா, மங்கலம், போத்துண்டி ஆகிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மன்னார்காடு தாலுகாவில் தூதுப்புழா, கரிம்புழா, அட்டப்பாடி பவானி, ஆனைக்கட்டி ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நதிகரையோரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என நீர்வளப்பாசனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்