பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் அரசு இசைக் கல்லூரி திருப்பாவை பாராயணம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில்  அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவியரின் திருப்பாவை பாராயணம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.வைணவத் திருத்தலங்களில் மார்கழி மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பாசுரம் என்ற வகையில் திருப்பாவையின் 30 பாசுரங்களும் பாடப்படுவது பெரும் சிறப்பாகும். சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருமொழி திருநாள் – திருவாய்மொழி திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பகல்பத்து – இராப்பத்து திருவிழா 23.12.2022 முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில் சுவாமி உலா வந்து அருள் பாலிப்பார். இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  இன்று (31.12.2022) திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் திருப்பாவை பாராயணம் செய்தனர். இதனை திருக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். நிறைவாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சியினை  ஏற்பாடு செய்து நடத்திட்ட தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் சவுமியா,  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுதாராஜன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன் ஆணையர் ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., சென்னை மண்டல இணை ஆணையர்கள் முனைவர் ந.தனபால், கே. ரேணுகாதேவி,  துணை ஆணையர்/செயல் அலுவலர் கவெனிதா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்