பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து வடக்கு மாவட்ட காங். ஆர்ப்பாட்டம்

 

கோவை, மார்ச் 8: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. “தேர்தல் பத்திரம் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் முறையான ஆவணங்களை தாக்கல் செய்யாமல், ஒன்றிய பா.ஜ அரசுக்கு ஆதரவாக செயல்படுவதால் இவ்வங்கியை கண்டித்து’’ இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார்.

மாநில துணை தலைவர்கள் எம்.என்.கந்தசாமி, அழகு ஜெயபால், மாநில செயலாளர் விஜயகுமார், மருதமலை முருகன் கோவில் அறங்காவலர் சொக்கம்புதூர் கனகராஜ், மாநகராட்சி கவுன்சிலர் சுண்டக்காமுத்தூர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிய அரசையும், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை தலைவர்கள் ஆறுச்சாமி, வெங்கிடபதி, பி.ஆர்.,ரங்கராஜன், முருகேசன், ரங்கசாமி, சக்திசதீஷ், குனிசை செல்வம், மோகன்ராஜ், ஜி.பி.கணேஷ், சத்தியலீலா, நசீர்உசேன், அருள்அந்தோணி, கே.ஆர்.தாமஸ், ரகமத்துல்லா, பேரூர் மயில், வடவள்ளி காந்தி, மாரியப்பன், கே.கே.சுப்பிரமணி, இமாலயன், சங்கர்நகர் ராஜன், வி.ஜி.பி.நடராஜ், பெள்ளாதி சம்பத், அர்ஜுன் கவுரவ், துரைஅருள்தாஸ், ஜேம்ஸ் பிரபு, ரபீக், ராஜ்குமார், எஸ்.காயத்ரி, பாலசுப்பிரமணியம், கராத்தே ராமசாமி, ஜமாலுதீன்,

ஐ.எஸ்.மணி, சுகுணாபுரம் ஆனந்த், தங்கமணி, துரைசாமி, வெள்ளியங்காடு வேலுச்சாமி, காமராஜ், ஆட்டோ லோகு, சத்தியநாராயணன், காளிதாஸ், ஜலீல், மேரி, பிரேமா, ரெஜினா மேரி, ரமணி, காமராஜ்துல்லா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், ரங்கநாதன், விஷ்ணுவர்தன், அபுதாகீர், ஜெயிலானி, ராஜேஷ், சைதன்யா, அன்புசெழியன், முகமது குட்டி, மன்சூர் அலி, முகமது முஸ்பா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை