பாம்பு கடித்து தொழிலாளி சாவு

 

ஈரோடு, அக்.23: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி, மொனசி, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (51). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும், வெளியூர்களுக்கு சென்று நெல் நாற்று நடும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, தங்கள் ஊரை சேர்ந்த 20 பேருடன், ராஜேந்திரனும், சாந்தியும், ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள கங்காபுரம், கொளத்துப்பாளையம் பகுதியில், சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 7ம் தேதி முதல் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்கள் அங்குள்ள குடோனின் முன்புறம் காரை வாசலில் இரவு நேரத்தில் படுத்து தூங்குவது வழக்கம். கடந்த 11ம் தேதி இரவும் அனைவரும் காரை வாசலில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது ராஜேந்திரனின் முழங்காலில் 12ம் தேதி அதிகாலை, கட்டு விரியன் பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதனால் வலியில் அலறி துடித்த அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு