பாப்பிரெட்டிப்பட்டியில் மரக்கன்று நடும் பணி

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 15: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி உட்கோட்டத்தில் 2400 மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்தார். உதவி கோட்ட பொறியாளர் சண்முகம் தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் நேதாஜி முன்னிலையில் தர்மபுரி -அரூர் நெடுஞ்சாலைகளிலும், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, பள்ளிப்பட்டி நெடுஞ்சாலை பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடுவதாக முடிவு செய்து, நேற்று 150 மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அந்த மரக்கன்றுகளுக்கு சாலை பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி பராமரித்து வரும் பணியை, சாலை ஆய்வாளர் மாரியப்பன் பார்வையிட்டார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை