பாப்பம்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

பள்ளிபாளையம், ஜூலை 13: பள்ளிபாளையம் அடுத்த பாப்பம்பாளையம் கிராம ஊராட்சி மையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சேசஷாயி காகித ஆலை நிர்வாகத்தின் அமைப்பான சர்வசேவா அறக்கட்டளையும், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய முகாமை சர்வசேவா டிரஸ்ட் அறங்காவலர் சுரேஷ், ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சேலம் அரவிந்த் கண் மருத்துமனை குழுவினர் பங்கேற்று நோயாளிகளை பரிசோதித்தனர். இதில் 30 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, இலவசமாக அறுவை சிகிச்சையளிக்கப்பட்டது. பார்வை குறைபாடுள்ள 100 பேர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

Related posts

துரைப்பாக்கம், முகப்பேர் பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் உள்ள 132 பேருந்து நிறுத்தங்களில் பழுதடைந்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி தகவல்