பாபநாசம் அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: வாழைகள் சேதம்

விகேபுரம்: நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் செட்டிமேடு, ஏர்மாள்புரம், வேம்பையாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அப்பகுதியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேல் வாழைகள் பயிரிட்டுள்ளனர்.  இந்நிலையில்  வாழை பயிர்களை  அடிக்கடி காட்டுபன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து இரவு நேரங்களில் குடிசைகள் அமைத்து தாங்கள் பயிரிட்டுள்ள வாழைக்கு காவல் இருந்து வருகின்றனர். நேற்றிரவு செட்டிமேடு பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி, மைக்கேல் பால்கனி, பாண்டி, பிச்சையா உள்பட 5 விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த சுமார் 300 வாழைகளை காட்டுப்பன்றிகள் கூட்டம் சாய்த்து தின்றுள்ளன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் அடிக்கடி காட்டுபன்றிகள் புகுந்து நாங்கள் பயிரிட்டிருந்த வாழைகளை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் எங்களுக்கு வாழை ஒன்றுக்கு ரூ.100 முதல் 150 வரை நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் காட்டுபன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உடனே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் உள்ள விளைநிலங்களை சுற்றி  வேலி அமைத்து  தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு