பாதாள சாக்கடை திட்டம் குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அவசர கூட்டம்

 

காஞ்சிபுரம், செப்.7: காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை திட்டம் குறித்து அவசர கூட்டம் மன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். ஆணையர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தும் பணிக்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மதிப்பீட்டிற்கு நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனியார் நிறுவனம் சார்பில், பாதாள சாக்கடை திட்ட பணியினை மேற்கொள்வது குறித்து ஆய்வு நடந்தது. அதில் உலக வங்கி வழிகாட்டுதல்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணியினை 2 கட்டங்களாக பிரித்து, பணி மேற்கொள்வது குறித்து ஒப்புதல் பெறப்பட்டது. அப்போது, பாதாள சாக்கடை பணிகள் குறித்து, மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தரப்பான கேள்விகளை கேட்டனர். அதற்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் முறையான விளக்கவுரை அளிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை