பாட்டில் மூடி தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே மருந்து பாட்டில் மூடி தொண்டையில் சிக்கி 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்தவர் பிஜு. தனியார் பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி ஆர்யா. இந்த தம்பதியின் பெண் குழந்தை வேதிகா (3). நேற்று காலை பிஜு வழக்கம் போல பணிக்கு சென்று விட்டார். வீட்டில் ஆர்யா மட்டுமே இருந்துள்ளார். அப்போது வேதிகா படுக்கையறையில் விளையாடிக்கொண்டிருந்தாள். வேதிகாவுக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் ஆர்யா அதற்கான மருந்தை கொடுத்துவிட்டு பாட்டிலை குழந்தையின் அருகிலேயே வைத்து விட்டு சமையலறைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தார். அப்போது வேதிகா மயங்கி கிடந்ததை பார்த்தார். உடனே பதற்றம் அடைந்தவர் குழந்தையை தூக்கிப் பார்த்தார். அப்போது தொண்டைக்குள் மருந்து பாட்டிலின் மூடி சிக்கி இருப்பது தெரியவந்தது. உடனே குழந்தையை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.நிலைமை மோசமானதால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் விரைந்து செயல்பட்டு வேதிகாவின் தொண்டையில் சிக்கியிருந்த மூடியை அகற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்….

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு