சண்டிகர்: பாஜக மகளிரணி துணை தலைவரான நடிகை சோனாலி போகத் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகை சோனாலி போகத் (41), பாஜகவின் மகளிரணி பிரிவு துணை தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் கோவா சென்றிருந்த அவருக்கு நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் இறந்த செய்தியை அவரது சகோதரர் உறுதிப்படுத்தியுள்ளார். சோனாலி போகத்தின் மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முன்னதாக கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆதம்பூர் சட்டமன்ற தொகுதியில் குல்தீப் பிஷ்னோய்க்கு எதிராக பாஜக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது….