பாஜக உட்பட 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில்

திருவண்ணாமலை, ஜூன் 4: திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட 31 வேட்பாளர்களில், பாஜக உட்பட 29 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சி.என்.அண்ணாதுரை(திமுக), எம்.கலியபெருமாள் (அதிமுக), அஸ்வத்தாமன் (பாஜக), ரமேஷ்பாபு (நாம் தமிழர்) உள்பட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், திமுக வேட்பாளர் அண்ணாதுரை 5,42,236 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 3,10,237 வாக்குகளும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 1,54,280 வாக்குகளும் பெற்றனர்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகையை பெற முடியும். அதன்படி திருவண்ணாமலை தொகுதியில், வாக்குகள் பதிவானது. எனவே, ஆறில் ஒரு பங்கு வாக்கு என்ற அடிப்படையில் வாக்குகளை பெற்றவர்கள் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப பெற முடியும். அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட 31 வேட்பாளர்களில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற்றுள்ளனர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு உட்பட 29 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்