பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டத்திற்கு மறுவாழ்வு, மீள் குடியமர்வு குழு கூட்டம்

 

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நங்காஞ்சியாறு நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டத்திற்கு மாவட்ட மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ இளங்கோ முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நங்காஞ்சியாறு நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், சேந்தமங்கலம் மேல்பாகம் மற்றும் கீழ்பாகம் ஆகிய 2 கிராமங்களில் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம் செயல்பட உள்ளது. இதற்கு நிலம் எடுப்பிற்கு உட்படும் விஸ்தீரணம் 49.75.0 ஹெக்டேர் புலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டுக்கான வரைவு திட்ட அறிக்கை மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கலெக்டர் மற்றும் ஆர்டிஓவால் வெளியிடப்பட்டது.

அது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நிர்வாகி, மறுவாழ்வு மற்றும் மீளகுடியமர்வு அலுவலரால் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இறுதி செய்யப்பட்ட திட்ட அறிக்கையில் நிலமெடுப்பில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைக் கூறுகள் வழங்க பரிந்து செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை மறு ஆய்வு செய்து, பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இறுதி செய்வது குறித்து குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநில மறுவாழ்வு ஆணையருக்கு பரிந்துரை செய்ய வசதியாக மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன், கவிதா (நிலமெடுப்பு), ஆர்டிஓ ரூபினா, தனித்துணை கலெக்டர் (நிலம்) கண்ணன், அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை