பாகிஸ்தானில் இருந்து ஊருடுவல் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து ஜம்முவுக்கு ஊடுருவிய 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஜம்முவின் சித்ரா நகரில் புறப்பட்ட லாரி காஷ்மீர் நோக்கி  சென்றுகொண்டிருந்தது. ஜம்முவின் தவி நகர் பாலத்தில் நேற்று காலை 7.30  மணியளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.  அப்போது, லாரிக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு  படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியோட முயற்சித்தனர்.  இதையடுத்து, லாரியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல்  நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிசண்டை  நடைபெற்றது. இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். லாரியை ஒட்டி வந்த டிரைவர்  தப்பியோடிவிட்டார். அவரை தேடும் பணியை பாதுகாப்பு படையினர்  துரிதப்படுத்தியுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட  4 தீவிரவாதிகளிடம் இருந்தும் 7 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு எம்4 ரக துப்பாக்கி, 3 பிஸ்டல், ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை ஜம்மு மண்டல கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் உறுதிப்படுத்தினார். ஜம்மு ராணுவ படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கவுரவ் கவுதம் உடனடியாக துப்பாக்கிச்சண்டை நடந்த இடத்தை ஆய்வு செய்தார். அதன்பின் சுட்டுகொல்லப்பட்ட தீவிரவாதிகள் சடலத்தையும் முழு சோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது:ஜம்முவின் நர்வால் பைபாஸ் பகுதியில் சமீபத்தில் ஒரு சரக்கு லாரியில் இருந்து  ஆயுதங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அப்போது லாரியில் பதுங்கி இருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் எல்லை தாண்டி வந்தார்களா, இல்லையா என்பது பற்றி விசாரணை நடக்கிறது. ஆனால் அவர்கள் சென்று கொண்டு இருந்த லாரி  ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது என்றுதான் இப்போது சொல்ல முடியும்.வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பாதுகாப்புப்படை உஷார் படுத்தப்பட்டதால் இந்த தீவிரவாதிகளின் தாக்குதல் சதி முன்கூட்டியே முறியடிக்கப்பட்டுள்ளது.   பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும்   ஜெய்ஷ் இ எம் கமாண்டர் ஆஷிக் நெங்ரூவாலால் இந்த  குழு அனுப்பப்பட்டதா என்றால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இறந்த தீவிரவாதிகள் பற்றி அடையாளம் தெரிந்தபிறகுதான் அதுபற்றி சொல்ல முடியும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஜம்மு டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில்,’இதுவரை 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களை காஷ்மீருக்கு அழைத்துச் சென்ற லாரி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். இரு தரப்புக்கும் இடையே 45 நிமிடங்களுக்கும் மேலாக கடுமையான துப்பாக்கிச் சூடு நீடித்தது. அப்போது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் சித்ரா பைபாஸ் சாலையில்  சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.    தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வுக்காக மாதிரிகளை சேகரித்தனர்’ என்று தெரிவித்தார்….

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து