பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையை ஆக்கிரமித்து காய்கறி கடைகள்: பஸ் டிரைவர்கள், வாகன ஓட்டிகள் தவிப்பு

சத்தியமங்கலம்:  புஞ்சை புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளால் பஸ் டிரைவர்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். புஞ்சை புளியம்பட்டியில்  பஸ் ஸ்டாண்ட் அருகே, தினசரி காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு 100 க்கும் மேற்பட்ட கடைகளில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிறு,குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வியாபாரம் செய்து வருகின்றனர்.  இதில், பலர் மார்க்கெட் நுழைவு வாயிலில் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையை ஆக்கிரமித்து இருபுறத்திலும் 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை வியாபாரிகள் அமைத்துள்ளனர். ஒரு சிலர் கூடாரமும் அமைத்து விட்டனர். இதை பார்த்து, தற்போது பலரும் கடைகள் அமைத்து வருவது, அதிகரித்து வருகிறது. இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறும் நிலை உள்ளது. காய்கறிகள் வாங்குவதற்காக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் போக்குவரத்து இடையூறால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. மேலும், வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் அடிக்கடி வாய்தகராறு, வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே, வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகளை அகற்றி,அந்த கடைகளை மார்கெட்டுக்குள் வைத்து வியாபாரம் செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கோரிக்கை எழுந்துள்ளது….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை